வீச்சரிவாளை காட்டி வழிபறி செய்த நபர் கைது
திருவாரூரில் வீச்சரிவாளை காட்டி வழிபறி செய்த நபர் கைது;
By : King 24x7 Website
Update: 2023-12-11 16:38 GMT
திருவாரூரில் வீச்சரிவாளை காட்டி வழிபறி செய்த நபர் கைது
திருவாரூர் விஜயபுரம் உழவர் சந்தை வழியாக வந்த நபரிடம் வீச்சரிவாளை காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் விக்னேஷ் (30) என்ற நபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இடையூறு விளைவிக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.