கபிஸ்தலம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் திருட்டு
கபிஸ்தலம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து இரும்பு கம்பிகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.;
இரும்பு கம்பி திருடியவர்
கபிஸ்தலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் தியாகராஜன் சம்பவத் தன்று தியாகராஜன் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பொழுது காவல் நிலையத்தில் வெவ்வேறு வழக்குகளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
அப்பொழுது அங்கு நிறுத்தி இருந்த லாரியிலிருந்து இரும்பு பட்டைகளை எடுத்துக் கொண்டு ஒடிய ஒருவரை கண்டதும் தலைமை காவலர் அவரை துரத்திச் சென்று பிடித்து கபிஸ்தலம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரிடம் ஒப்படைத்தார்.
மேலும் அவரை விசாரணை செய்ததில் அவர் கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம், தோப்பு தெரு, ஜோசப் மகன் நெப்போலியன் வயது 55 என்பது தெரியவந்தது அவரிடம் இருந்த 10 கிலோ எடை கொண்ட இரும்பு பட்டைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,,,