கொடைக்கானல் மலைப்பகுதியில் வெடிபொருட்களை பயன்படுத்தியதாக மூவர் கைது
கொடைக்கானல் மலைப்பகுதியில் வெடிபொருட்களை பயன்படுத்தியதாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் கீழ் மலைக்கிராம பகுதியான செம்பிரான் குளம் பாண்டியன் பாறை பகுதியில் பாச்சலூர் ரோந்து வன பாதுகாவலர் மருதை வீரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தனியார் தோட்ட பகுதியில் ரெக்ஸ் ஜெலட்டின் குச்சிகள் 15ம் எலக்ட்ரிக் டெக்னிக் 23 என்இடி டெட்டனேட்டரும் கேட்பாரற்று கிடந்துள்ளன.
இதனை கைப்பற்றி கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு சென்று கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தோட்டப்பகுதியில் பாறைகளை உடைப்பதற்காக ஈரோடு மாவட்டம் ஒட்டாம் புதூர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (52),திண்டுக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த நந்தவனப்பட்டி ரோடு வேலப்ப நாயக்கர் வட்டத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (27),
அவரது தந்தை வேல்முருகன் (52) ஆகியோரிடமிருந்து வாங்கியது தெரியவந்துள்ளது இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா அல்லது தோட்டப்பகுதியில் உள்ள பாறைகளை உடைப்பதற்காகத்தான் இவை பெறப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பதை அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவர்கள் மீது வெடிப்பொருட்களை அனுமதியின்றி விற்பனைக்கு கொண்டு சென்றது மற்றும் தேவைக்கு வாங்கியது ஆகிய காரணங்களுக்காக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்