திருநங்கையை வெட்டி நகை,செல்போன் பறிப்பு - மேலும் நான்கு பேர் கைது.

மதுரவாயல் அருகே திருநங்கையை வெட்டி நகை, செல்போன் பறித்த சம்பவத்தில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-12-25 03:58 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

மதுரவாயல் அடுத்த துண்டலம், கன்னியம்மன் கோவில் தெருவில் திருநங்கைகள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் காரில் வந்த மர்ம நபர்கள் திருநங்கைகள் குடியிருக்கும் வீட்டிற்குள் நுழைந்து அவர்களிடமிருந்து நகை, செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். மேலும் அவர்களை தடுக்க சென்ற திருநங்கை மடோனா என்பவரை வெட்டி விட்டு சென்ற நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

அப்போது காரில் தப்பி செல்ல முயன்றதில் எபினேசர் என்பவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்து வந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அம்பத்தூரை சேர்ந்த ஐயப்பன்(37), வினோத் ராஜா(என்ற)சென்ட்ரல் ராஜா(37), மணிகண்டன்(30), பாலாஜி(33), உள்ளிட்ட மேலும் 4 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்து இவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள், கார், நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது பல்வேறு குற்ற சம்பவங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. குடிபோதையில் வந்தவர்கள் திருநங்கைகளிடம் அதிகமான பணம், நகை இருக்கும் என்பதற்காக அங்கு சென்று பறித்து சென்றது தெரியவந்தது.

Tags:    

Similar News