சென்ட்ரிங் நிறுவன உரிமையாளரை தாக்கிய இருவர் கைது

சென்ட்ரிங் நிறுவன உரிமையாளரை தாக்கி மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-07 16:37 GMT

கும்பகோணம் மருதமுத்துநகரை சேர்ந்தவர் மோகன்(வயது 38). இவர் தனது உறவினருடன் கும்பகோணம் சென்னை சாலையில் கொரநாட்டு கருப்பூர் பைபாஸ் சாலை அருகே செட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி மோகன் தனது நிறுவனத்தில் வேலையில் இருந்த போது, கொரநாட்டு கருப்பூர் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டடோர் வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு முன்பக்கம் நன்கொடையாக தகர கொட்டகை அமைத்து தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அதிக தொகையில் நன்கொடை செய்யமுடியாது என்றும்,

குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக கொடுப்பதாகவும், தன்னுடைய உறவினரான பாலகிருஷ்ணனிடம் பேசுமாறு செல்போனை கொடுத்துள்ளார். செல்போனில் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே அவர்களுடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மோகன் இப்போது செல்லுங்கள் பின்னர் எனது உறவினர் வந்தவுடன் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கோவிலுக்கு நன்கொடையாக தகரகொட்டகை அமைத்து தர மாட்டாயா என்று கூறி தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை நிறுவனத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து சாலையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதனை தடுக்க வந்த சவுந்தர்யன் என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்த்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த தாக்குதல் குறித்த வீடீயோ சமூகவலைதளங்கள் வைரலானது. மேலும் இதுகுறித்து மோகன் கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் கொடுத்தார். அதன் பேரில் கொரநாட்டுகருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூமிநாதன்(51), கனகராஜ்(36) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News