நாயுடுபுரம் பகுதியில் தறிகெட்டு ஓடிய ஜீப் மோதி இருவர் படுகாயம்

நாயுடுபுரம் பகுதியில் தறிகெட்டு ஓடிய ஜீப் மோதி இருவர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2024-04-25 08:17 GMT

தறிகெட்டு ஒட்டிய ஜீப்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலில் இன்று திருவிழா நடை பெற்று நிறைவடைந்த நிலையில்,இந்த திருவிழாவிற்கு குணா என்பவர் தனது நண்பர்களுடன் ஜீப் வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜீப் வாகனத்தில் அமர்ந்து இருந்தனர், ஒரு கட்டத்தில் ஜீப் வாகனத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு இளைஞர் மட்டும் இயக்கியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து ஜீப் வாகனம் இறக்கமான சாலையில் நிறுத்தப்பட்டு இயக்கிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடிய ஜீப் சாலையில் நடந்து சென்ற ராஜேஸ்வரி(29) என்ற பெண்மணி மீது மோதியது மேலும் இப்பகுதியில் உள்ள தனியார் விடுதிக்குள் புகுந்த ஜீப் அங்கு காவலுக்கு நின்றிருந்த செக்யூரிட்டி மீதும் பலமாக மோதியது,

Advertisement

இதில் பெண் உள்ளிட்ட இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

முதற்கட்டமாக ஜீப் வாகனத்தின் உரிமையாளரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர், திருவிழா நிறைவடைந்த நிலையில் இந்த வாகனம் தறிகெட்டு ஓடியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது,இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது,

Tags:    

Similar News