வாகன விபத்து வேன் ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை
வாகன விபத்து - பெண் பலி. சங்ககிரி நீதிமன்றம் வேன் ஓட்டுனருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்க தீர்ப்பு.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 10:24 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பகுதியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் உயிரிழந்த வழக்கில் வேன் ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேவூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சீரங்கன் மகன் மாரியப்பன் (46). இவரது மனைவி செல்வி (36). இருவரும் தேவூர், செட்டிப்பட்டி அருகே உள்ள நாவலான்காடு பகுதியில் உள்ள மாரியப்பனின் மாமனார் வீட்டிற்கு அவரது மனைவியும், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு வீட்டிற்கு அரசிராமணி செட்டிப்பட்டி சந்தை அருகே சென்றபோது பின்னால் வந்த வேன் அவர்கள் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற செல்வி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுநர் எடப்பாடி வட்டம், மேல்அக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் அழகேசனை (38) கைது செய்து மீது சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.பாபு குற்றம் சாட்டப்பட்ட வேன் ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.