அழகிய மண்டபத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்: போலீசார் விசாரணை
அழகிய மண்டபத்தில் சாலையோரம் கிடந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பு. போலீஸ் விசாரணை.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-06 10:11 GMT
காவல் நிலையம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் வியன்னூர் ஏ கிராம நிர் வாக அதிகாரி ரம்யா. இவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அழகியமண்டபத் தில் சாலையோரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதிய வரை 108 ஆம்பு லன்சில் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
முதலுதவி சிகிச்சைக்கு பின் அடையாளம் தெரியாத அந்த முதியவர் மேல் சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து கிராம அதிகாரி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசா ரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.