சேலத்தில் அரசு பஸ் மோதி வடமாநில வாலிபர் பலி
சேலத்தில் அரசு பஸ் மோதி வடமாநில வாலிபர் பலி;
By : King 24x7 Website
Update: 2023-12-17 01:56 GMT
சேலத்தில் அரசு பஸ் மோதி வடமாநில வாலிபர் பலி
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம் கைலாஷ் (வயது 29). இவர் சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள ஒரு துரித உணவகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் உணவகத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராம் கைலாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.