பணி நேரத்திலேயே மது அருந்தும் வீடியோ வைரல் - ஆயுதப்படை போலீஸார் இடைநீக்கம்!!
போலீஸ் வாகனத்தில் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ (சிறப்பு உதவி ஆய்வாளர்) ஒருவர் மது அருந்தும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதனால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உயரதிகாரிகள் உத்தரவின் பெயரில் விசாரணை நடத்தியபோது மது அருந்தியது சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் லிங்கேஸ்வரன் என்ற எஸ்.எஸ்.ஐ எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது ஆயுதப்படை போலீஸார் கூறுகையில், "சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு அவர்களைப் பாதுகாப்புடன் சிறைக்குக் கொண்டு செல்லும் பணிகளை ஆயுதப்படை போலீஸார் எஸ்.எஸ்.ஐ லிங்கேஸ்வரன் ஈடுபட்டு வந்தார்.
கைதிகளை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது எஸ்.எஸ்.ஐ லிங்கேஸ்வரன், சீருடையில் இருப்பதில்லை. கைதிகள் சிலருக்கு செல்போனை கொடுத்துப் பேச வைப்பார் எனவும் அதோடு பணி நேரத்திலேயே மது அருந்துகிறார் என்ற தகவல்கள் விசாரணையின்போது தெரியவந்தன. அதுகுறித்து எங்களின் உயரதிகாரிக்கு அறிக்கை கொடுத்தோம்.
அதன் அடிப்படையில்தான் லிங்கேஸ்வரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த காணொளியை எடுத்தது யார், அதை யார் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது என்றும் விசாரணை நடத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்திருந்தார்.