கடன் தொல்லையால் பெண் மாயம்: கணவர் காவல் நிலையத்தில் புகார்
நித்திரவிளை அருகே கடன் தொல்லையால் மனைவி மாயமானது குறித்து கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-23 10:11 GMT
காவல் நிலையம்
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ், இவர் வீட்டின் அருகே அக்கோரியம் வைத்துள்ளார். இவரது மனைவி சிந்து. இவருக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. சிந்துவுக்கு கடன் கொடுத்தவர்கள் தற்போது தொலைபேசியில் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 18 ம் தேதி காலை கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சிந்து பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு மற்றும் பல பகு திகளில் தேடி பார்த்துள்ளனர்.
ஆனால் சிந்துவை கண்டுபிடிக்க முடியவில்லை. இது சம்பந்தமாக பிரின்ஸ் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண் மாயம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.