நீலகிரி அருகே பெண் சாவில் திருப்பம்: வீட்டின் உரிமையாளர் கைது

நீலகிரி அருகே பெண் சாவில் திருப்பமாக வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-29 17:45 GMT

கோப்பு படம் 

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சேர்ந்தவர் சுஜி ரீட்டா 59. இவருக்கு, பேஸ்புக் வாயிலாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மினிகோல்டன் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் 45, என்பவர் பழக்கமாகி உள்ளார். இவர், திருத்தணி பைபாசில் மெடிக்கல் கடை வைத்துள்ளார்.

இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இது, சுஜி ரீட்டாவின் கணவருக்கு பிடிக்காததால், அவரது கணவர் பிரிந்து திருத்தணியில் சில மாதங்கள் தங்கியுள்ளார். அப்போது, வியாபாரத்தில் நஷ்டம் அடைந்த அசோக்குமாருக்கு, 5 லட்சம் ரூபாயை சுஜி ரீட்டா கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில, 4 லட்சத்தை திருப்பி அளித்தவர், 1

லட்சத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து, சொந்த ஊருக்கு சென்ற சுஜி ரீட்டா கடந்தாண்டு திருத்தணிக்கு வந்து பணத்தை கேட்டுள்ளார். அப்போது, அவரை சமாதானப்படுத்திய அசோக்குமார், தனக்கு சொந்தமான மினி கோல்டன் தெருவில் உள்ள வீட்டின் முதல் மாடியில் தங்க வைத்து, தினமும் அவருக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், மீண்டும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, 2.60 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். மொத்தம் 3.60 லட்சம் ரூபாயை தர வேண்டும் என, தொடர்ந்து சுஜி ரீட்டா கேட்டு வந்ததால் கோபமடைந்த அசோக்குமார்,

கடந்த 25ம் தேதி கையால் தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த சுஜி ரீட்டா, காஸ் சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த திருத்தணி போலீசார், நேற்று அசோக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News