இளம்பெண் மர்மச்சாவு - தாய் போலீசில் புகார்
இளம்பெண் மர்மச்சாவு - தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்;
By : King 24x7 Website
Update: 2023-12-06 07:00 GMT
இளம்பெண் மர்மச்சாவு - தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே வெள்ளக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இருசாகவுண்டன். இவருடைய மனைவி சுமதி (22). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த சுமதியை உறவினர்கள் மீட்டு ஓமலூரில் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுதொடர்பாக சுமதியின் தாய் இருசம்மாள் (43) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்த சம்பவம் குறித்து மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.