உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.

ஓந்தம்பட்டியில் போர்வெல் வாகனம் மோதி உயரழுத்த மின் கம்பியை தொட்டதால் இளைஞர் உயிரிழப்பு.

Update: 2023-12-03 15:35 GMT

ஓந்தம்பட்டியில் போர்வெல் வாகனம் மோதி உயரழுத்த மின் கம்பியை தொட்டதால் இளைஞர் உயிரிழப்பு.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தூளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் நந்தகுமார் வயது 23. இவர் தனியார் போர்வெல் நிறுவனத்தில் டிரில்லிங் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், டிசம்பர் ஒன்றாம் தேதி மாலை 5 மணி அளவில், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓந்தாம்பட்டி பூவாலம்மன் கோவில் அருகே, பணியில் இருந்த போது, தூளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் கவனக்குறைவாக போர்வெல் வாகனத்தை ஓட்டிதால், நந்தகுமார் மீது மோதியது. அப்போது, எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியை நந்தகுமார் தொட நேர்ந்ததால், மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த நந்தகுமாரின் தந்தை மூக்கன், இது குறித்து வெள்ளியனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், போர்வெல் வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டி உயிரிழப்புக்கு காரணமான செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Tags:    

Similar News