துப்பாக்கி முனையில் சுற்றி வளைக்கப்பட்ட இளைஞர்கள் - நாகர்கோவிலில் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு நாகர்கோவிலில் பதுங்கி இருந்த இளைஞர்களை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றுவளைத்து கைது செய்தனர்.;

Update: 2024-04-29 03:57 GMT

பைல் படம் 

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வாலிபர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.   இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் தலைமறைவாகினர். அவர்களை பழவூர் போலீசார் தேடி வந்தனர். சம்பந்தப்பட்ட இரு வாலிபர்களும் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று நாகர்கோவில் வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Advertisement

கணேசபுரம் பகுதியில் சம்பந்தப்பட்ட இரு வாலிபர்களும் பைக்கில் சென்று கொண்டிருப்பதாக தனிப்படை போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற போது பைக்கில் சென்று இரண்டு பேரையும் மடக்க முயன்றனர். அப்போது அவர்கள் இருவரும் திடீரென தப்பி ஓட முயன்ற போது துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்து படித்தனர். பின்னர் இருவரையும் பழவூர் கொண்டு சென்றனர். பிடிபட்ட இரண்டு பேரில் ஒருவர் போலீஸ் சரித்திர பதிவேடு பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News