யூடியூப் - ஐ பார்த்து ஆப்ரேஷன் : சிறுவன் பலியான விவகாரம் - போலி டாக்டர் கைது !!!

Update: 2024-09-10 07:16 GMT

போலி டாக்டர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

யூடியூப் - ஐ பார்த்து ஆப்ரேஷன் செய்ததில் சிறுவன் பலியான விவகாரம் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். பீகார் மாநிலம் சரண் மாவட்டம் பூவால்பூர் கிராமத்தில் வசித்தவர் கோலு என்ற கிருஷ்ணகுமார் 15 சிறுவனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவனுக்கு வயிற்றுவலி அதிகமானதால் சரணில் மருத்துவமனை நடத்தி வரும் அஜித் குமாரி புரியிடம் பெற்றோர் சிறுவனை அழைத்து காண்பித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் கோலுவுக்கு அஜித்குமார் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பிறகு தான் சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்தது இதனை அடுத்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் சிறுவனை ஆம்புலன்ஸில் பாட்னாவுக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவன் உயிரிழந்தான். சிறுவனின் தாத்தா பிரகலாத் பிரசாத் கூறுகையில், கோலுவுக்கு அறுவை சிகிச்சை செய்ய எங்களிடம் அனுமதி எதுவும் கேட்கவில்லை சிறுவன் உயிரிழந்ததை கேள்விப்பட்டதும் அஜித் குமார் புரி தப்பி ஓடிவிட்டார் என்றார். இந்த சம்பவத்தை அடுத்து சிறுவனின் பெற்றோர் போலீசீல் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த அஜித் குமார் போலி டாக்டர் என்றும் யூடியூப் - ஐ பார்த்துதான் நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்வார் என்றும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலி மருத்துவர் அஜித்குமார் புரியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News