1 கப் கோதுமை மாவு மட்டும் போதும் மொரு மொரு முறுக்கு ரெடி !!!
கோதுமை என்றால் உடலுக்கு ஆரோக்கியம் தர கூடிய உணவு ஆகும். கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. கோதுமையில் களி செய்து விருப்பமான குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும், கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்.
முறுக்கு என்றாலே தீபாவளி தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் முறுக்கை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது. முறுக்கு என்றாலே மொறுமொறு வென்று இருக்கும் ஒரு சுவையாக பலகாரம் ஆகும். அதுமட்டுமில்லாமல் முறுக்கில் பல வகையான பல வகையான வடிவங்களில் உள்ளது. இன்றைய பதிவில் கோதுமை மாவை வைத்து சுவையான முறுக்கை செய்வதை பார்க்கலாம் வாங்க ....
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்
பச்சரிசி – 1/4 கப்
பொட்டுக் கடலை – 1/4 கப்
மிளகாய் தூள்– 1 டேபிள் ஸ்பூன்
எள் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் –1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பின்பு தண்ணீர் கொதி வந்தவுடன் இட்லி தட்டின் மீது ஒரு காட்டன் துணியை போடவும். பிறகு 2 கப் கோதுமை மாவு, 1/4 பச்சை அரிசி மாவு இந்த இரண்டு மாவையும் அந்த இட்லி தட்டின் மேல் மாவை சேர்த்து மூடி போட்டு மூடவும். இதனை 5 லிருந்து 7 நிமிடம் வேக வைக்கவும். 7 நிமிடம் கழித்து மாவை கையில் எடுத்து பார்த்தால் கையில் ஒட்டாத படி இருக்க வேண்டும். ஆனால் அந்த மாவனது கெட்டியான நிலையில் காணப்படும். அதனை மாவை ஒரு பவுலுக்கு மாற்றி நன்றாக கிளறி விடவும். ஒரு மிக்சியில் 1/4 கப் பொட்டுக் கடலை சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக அரைக்கவும். பின்பு ஒரு வடிகட்டி எடுத்து கொண்டு அரைத்து வைத்த பொட்டுக்கடலை மற்றும் வேக வைத்த மாவை சல்லடை கொண்டு சலித்துக் கொள்ளவும். பிறகு அந்த மாவில் மிளகாய் தூள், எள், பெருங்காயம், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பிணைவது போல் பிணைய வேண்டும். மாவனது நல்ல மிருதுவான தன்மையில் வந்தவுடன், முறுக்கு அச்சில் செய்து வைத்த மாவை ஒவ்வொரு உருண்டையாக வைக்கவும். பின்பு ஒரு கரண்டியின் மேல் எண்ணெயை தடவி விடவும். பிறகு முறுக்கு அச்சில் வைத்துள்ள மாவை கொண்டு கரண்டியில் மேல் சுற்ற வேண்டும். பிறகு ஒரு கடாயை எடுத்து கொள்ளவும். அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடான பிறகு செய்து வைத்த முறுக்கு மாவை எண்ணெயில் போட்டு எடுத்தால், சுவையான கோதுமை முறுக்கு தயார்.