வித்தியாசமான சுவை மிகுந்த கசகசா பாயசம் !!
தேவையான பொருட்கள் :
கசகசா - 2 தேக்கரண்டி
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப்
முந்திரி -8
திராட்சைகள் - 2
நெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 4 கப்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து முதலில் வெல்லப்பாகு தயார் செய்ய வேண்டும். கசகசா, முந்திரி, ஃப்ரஷ்ஷாக துருவி அரைத்த தேங்காய் மற்றும் ஏலக்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக பேஸ்ட் போல மைய அரைத்து கொள்ள வேண்டும். பின்பு வெல்லப்பாகில் இந்த அரைத்த கசகசா பேஸ்ட் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை வேகவைக்க வேண்டும்.பாயசம் பதத்துக்கு வரும்வரை கொதிக்க விட வேண்டும். பின்பு வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் நெய்யை பாயசத்தில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.அவ்வளவு தான் சுவையான ஆரோக்கியமான உடலை சூட்டைக் குறைக்கக் கூடிய கசகசா பாயசம் ரெடி.