உடலை வலுப்படுத்தும் இஞ்சி துவையல் !!
காலை உணவுக்கு இஞ்சி துவையல். இது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். பித்தத்தை குறைத்து உடலுக்கு நன்மை தரும். இஞ்சியில் பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உதாரணமாக, இது குமட்டலைக் குறைக்கவும், எடை இழப்பை நிர்வகிக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், நரம்பு செயல்பாட்டைப் பாதுகாக்கவும் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
தேவையான பொருட்கள் :
1.இஞ்சி
2.காய்ந்த மிளகாய்
3.தேங்காய் துருவல்
4. உ.பருப்பு
5. கடுகு
6. கறிவேப்பிலை
7. புளி
8. உப்பு
9. எண்ணெய்
செய்முறை :
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உ.பருப்பு, இஞ்சி ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்பு ஆறியவுடன் பிறகு வறுத்த பொருட்களுடன் உப்பு, புளி, நீர் சேர்த்து கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். சுவையான ஆரோக்கியமான இஞ்சி துவையல் ரெடி. இட்லி மற்றும் தோசையுடன் பரிமாறலாம்.