சீஸ் பாஸ்தா ரெசிபி !!
By : King 24x7 Angel
Update: 2024-05-31 12:00 GMT
என்னதான் பாஸ்தாவில் பல வெரைட்டிகள் இருந்தாலும் சீஸி பாஸ்தாவிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று கூட சொல்லலாம். அப்படி விரும்புவோருக்கு தான் இந்த ரெசிபி.
தேவையான பொருட்கள் :
பாஸ்தா - 250 கிராம்
பால் - 1 கப்
மைதா - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 3 ஸ்பூன்
பூண்டு பல் - 10
சீஸ் - தேவையான அளவு
சில்லி பிலேக்ஸ் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பாஸ்தாவை வேக வைத்து எடுத்து கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டு,மைதா சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பால் சேர்த்து கலந்து சில்லி பிலேக்ஸ்,சீஸ்,பாஸ்தா கலந்து 5 நிமிடம் கழித்து இறக்கவும். சீஸ் பாஸ்தா ரெடி.