கலர்புல்லான காஷ்மீர் புலாவ் !!
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி(200கி)- 1கப்
முந்திரி பருப்பு - 15
முந்திரி பழம் - 15
பாதம் பருப்பு - 10
நெய் - 4ஸ்பூன்
பட்டை - 1
லவங்கம் - 5
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
சீரகம் - 1ஸ்பூன்
மிளகு - 1/2ஸ்பூன்
வெங்காயம் - 1
மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சப்ரான் பால் - 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - இலை சிறிது
மாதுளை முத்துக்கள் - சிறிது
செய்முறை :
பாசுமதி அரிசியை நன்கு கழுவி20நிமிடம் ஊற வைக்கவும்.1பின்ச் குங்கும பூவை பாலில் (சப்ரான் பால்)கலந்து வைத்து கொள்ளவும்.தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். குக்கரில் நெய் விட்டு முந்திரி பருப்பு, பழம்,பாதம் ஐ வறுத்து எடுத்து கொள்ளவும். அதே நெய்யில் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை, சீரகம், மிளகு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.வதக்கிய பிறகு 1டம்ளர் அரிசிக்கு 1.5டம்ளர் தண்ணீர், சப்ரான் பால், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்த பின்பு அரிசி, வறுத்து வைத்துள்ள பருப்புகள் சேர்த்து மூடி வைத்து 2விசில் விடவும். விசில் சத்தம் அடங்கியதும் கொத்தமல்லி இலை,மாதுளை முத்துக்கள் தூவி பரிமாறவும்.