சமையல் சஸ்பென்ஸ் !
Update: 2024-05-01 09:24 GMT
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது கடலைமாவைப் புளித்த தயிரில் கலந்து சேப்பங் கிழங்குடன் சேர்த்துச் செய்தால் மொறு மொறு வென்று இருக்கும்.
வெண்டைக்காய் வதக்கும் போது உதிரி உதிரியாக இருக்க இரண்டு ஸ்பூன் மோரோ அல்லது புளித்தண்ணீரோ தெளித்து வதக்கினால் போதும்.
மோர்க்குழம்பை இறக்கும் முன் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
வெந்தயக் குழம்பு கொதிக்கும் போது இரண்டு உளுந்து அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டுக் குழம்பை இறக்கவும்.
சாம்பாரை நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயும், கறிவேப்பிலையும் போட்டு மூடி வைக்கவும். மணமாக இருக்கும்.
கத்தரிக்காய் எண்ணெய் கறிக்கு வதக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டித் தயிரை அதில் விட்டால் கத்தரிக்காய் கறுப்பாக ஆகாமல் இருக்கும்.