சுவையான வாழைப்பழ அல்வா ரெசிபி !

Update: 2025-01-06 11:57 GMT

வாழைப்பழ அல்வா

இனிப்புகளில் அல்வாக்கள் என்றால் ஒரு தனி ஆர்வம் எல்லாருக்கும் இருக்கும். வாழைப்பழத்தை வைத்து செய்யப்படும் மங்களூர் அல்வா பிரபலமான ஒன்று தான். அதனை நம்ம வீட்டிலேயே செய்யலாம்.

இதர பழங்களை வைத்து பலவகை அல்வாக்கள் செய்யப்பட்டாலும் வாழைப்பழத்தை வைத்து செய்யப்படும் அல்வா மிகவும் தனித்துவமான ஒரு சுவையை கொடுக்கும்.


தேவையான பொருட்கள் :


நன்றாக பழுத்த வாழைப்பழங்கள் 5

சர்க்கரை அரை கப்

ஏலக்காய் தூள் கால் டீஸ்பூன்

முந்திரி கால் கப்

நெய் கால் கப்

செய்முறை :

ஒரு மிக்சி ஜாரில் வாழைப்பழங்களை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனை மென்மையாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.

கெட்டியான அல்வா வேண்டுமென்றால் கைகளில் பிசைந்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ச்சி பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள வாழைப்பழ பேஸ்ட்டை சேர்த்து அடுப்பை மிதமாக வைத்து ஒரு 15 நிமிடங்கள் கை விடாமல் கிளறவும்.

கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் நிறம் மாற துவங்கும். அதன் பிறகு அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறுங்கள். அதனை தொடர்ந்து அதில் முந்திரியையும் சேர்த்து கிளறவும். இப்பொது முற்றிலும் அல்வாவின் நிறம் மாறியிருக்கும். இறுதியாக அதில் ஏலக்காய் தூளையும் சேர்த்து கிளறுங்கள்.

இதில் சர்க்கரை சேர்த்த பிறகு 20 நிமிடங்கள் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். அப்போது மெல்ல அல்வா கெட்டியாக பாத்திரத்தில் ஒட்டாத தன்மை கொண்ட பதத்திற்கு வர துவங்கும். பிறகு அந்த அல்வாவை இறக்கி நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடுங்கள்.

அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.

Tags:    

Similar News