ருசியான கேரளா சம்மந்தி ரெசிபி !!

Update: 2024-10-30 11:10 GMT

கேரளா சம்மந்தி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நம்ம விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஷோவில் சம்மந்தி சண்டை வந்தது. நிறைய பேருக்கு சம்மந்தி என்றாலே தெரியாது. உங்களுக்கு கண்டிப்பா தெரியலனா இந்த ரெசிபி பாத்து தெரிஞ்சிகோங்க. இது தான் அந்த சம்மந்தி ரெசிபி. ரொம்ப ஈசியான ரெசிபியும் கூட கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 6

இஞ்சி- 1 துண்டு

உப்பு- தேவையான அளவு

தேங்காய்- 1

சின்ன வெங்காயம்- 10

புளி- சிறிதளவு

கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை :

முதலில் ஒரு காடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், புளி, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அடுத்து இதனை நன்கு கலந்து உருட்டினால் கேரளா சம்மந்தி தயார்.

Tags:    

Similar News