நம்ம குழந்தைகளுக்கு டிப்ரேண்டா நண்டு லாலிபாப் செஞ்சி குடுங்க... விரும்பி சாப்பிடுவாங்க !!
கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையில் இருப்பார்கள். அதனால நம்ம குழந்தைகளுக்கு ஹில்தியான நண்டு லாலிபாப் செஞ்சி குடுங்க, அது மட்டும் இல்லாம இந்த நண்டு நம்ம கண் பார்வைக்கு ரொம்பவே உதவியா இருக்குது. மூளை சிறப்பாக செயல்படவும், நரம்பு மண்டலம் செயல்பாடுகளுக்கும் இந்த நண்டு உதவி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நண்டு சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. காயங்கள் சீக்கிரமாக குணமாக நண்டு உதவுகிறது. முடக்குவாதம் வராமல் தடுக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவே நண்டினை எடுத்துக் கொள்ள வேண்டும்.. கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அதனால் மருத்துவரை கலந்தோசித்துவிட்டு உணவில் சேர்த்து கொள்ளலாம். இப்போ வாங்க எப்படி செய்யலாமன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள் :
முட்டை - 1
இஞ்சிபூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
கரம்மசாலாதூள்- ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன்
மைதா மாவு- ஒரு ஸ்பூன்
பிரெட் தூள்- தேவையான அளவு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை, எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை :
முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் நண்டுகளை போட்டு வேக வைக்க வேண்டும்.
நண்டு நன்றாக வெந்ததும், ஆறவைத்து ஓடுகளை உடைத்து சதைகளை மட்டும் தனியாக எடுத்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, கரம்மசாலாதூள், மஞ்சள்தூள், மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு, இதில் இருந்து கொஞ்சமாக எடுத்து லாலிபாப் வடிவில் செய்து அதில் குச்சியோ அல்லது நண்டின் கால்களையோ வைத்து கொள்ளலாம்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் பிரெட் தூள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் சூடானதும், ஒரு லாலிபாப்பை எடுத்து, முட்டையில் முக்கி எடுத்து பின்னர் பிரெட் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான நண்டு லாலிபாப் ரெடி.