தீபாவளி ஸ்பெஷல் - திணை லட்டு

Update: 2023-11-06 10:49 GMT

திணை லட்டு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்த தீபாவளிக்கு இப்படி லட்டு செய்து பாருங்க உங்கள் குழந்தைகள் இந்த தீபாவளியை திணை லட்டுடோடதான் நேரம் கடத்துவாங்க பாருங்களேன்.., அது மட்டுமல்லாமல் திணை அரிசி உடல் எடையை அதிகரிக்கவும் நரம்பு கோளாறுகளை நீக்கவும் பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

திணை அரிசி-2கப்

பாசிப்பயிறு-2கப்

ஏலக்காய் -5

தூள் வெல்லம்-2கப்

முந்திரி-10

திராட்சை-10

செய்முறை :

திணை அரிசி பாசிப்பயிறு இரண்டையும் பொன்னிறமாக வறுத்து மாவாக்கிக் கொள்ளவும்.இத்துடன் வறுத்து பொடித்த ஏலக்காய் வெல்லம் சேர்க்கவும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நெய்யில் உருண்டை பிடித்தால் திணை லட்டு ரெடி .

Tags:    

Similar News