மீந்து போன சாதம் இருக்கா? அப்போ இந்த ரைஸ் பக்கோடா ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க !!
தேவையான பொருட்கள்:
மீந்து போன சாதம் - 2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சாதத்தை எடுத்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள் காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து க் கொள்ள வேண்டும்.
அதன் பின் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு கையால் பிசைந்து விட வேண்டும்.
பின் கைகளில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள கலவையை உங்களுக்கு விருப்பமான வடிவில் நீளமாகவோ அல்லது தட்டையாகவோ தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் நன்கு சூடானதும், அதில் செய்து வைத்துள்ள பக்கோடாக்களை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ரைஸ் பக்கோடா ரெடி.