சுவையான வாழைத்தண்டு சூப்’- செய்வது எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள் :
வாழைத்தண்டு - 1 அடி அளவுக்கு
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 3
பூண்டு பல் - 5
கொத்தமல்லி - 1 கொத்து
வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
மல்லி விதை - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் - 1 சிட்டிகை
துவரம் பருப்பு - 1 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட வாழைத்தண்டு, வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
தொடர்ந்து எடுத்துக்கொண்ட துவரம் பருப்பை சுத்தம் செய்து, குக்கர் ஒன்றில் மூழ்கும் அளவு தண்ணீருடன் சேர்த்து 4 விசில் வர வேக வைத்து பின் மசித்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
தற்போது சூப் தயார் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயுடன் பட்டை, பே இலை, கிராம்பு உள்ளிட்ட மசாலா பொருட்களையும், வெங்காயம் - பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதனுடன் தக்காளி, வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள், கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து பச்சை வாசம் நீங்க வதக்கிக்கொள்ளவும்.
பின் இதனுடன் 2 கப் அளவு தண்ணீர், குக்கரில் அவித்த பருப்பு சேர்த்து 10 - 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கவும். பின் இதில் இருக்கும் திப்பைகளை வடிகட்டி நீக்கிவிடவும்.
பின் இறுதியாக இதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு மற்றும் சிறிதளவு மிளகு பொடி சேர்த்து கிளறிவிட சுவையான சூப் தயார்.