முட்டை மசால் என்னங்க வித்தியாசமா ஏதாவது சாப்பிடணும் போல இருக்கா? இந்த பதிவு உங்களுக்குத்தான்..!
கலர்ஃபுலான அட்டகாசமான முட்டை மசால் எப்படி பண்றதுன்னு பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை- 4
எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் -1
தக்காளி -2
மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
பிரியாணி இலை-1
லவங்கப்பட்டை -1
கிராம்பு-2
இஞ்சி பூண்டு விழுது
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உடைத்து வைத்த முட்டையை அது ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். முட்டை பொரியல் போல வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் மற்றொருவாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் கிராம்பு போட்டு பொறிந்ததும் நறுக்கி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமானதும் நன்கு அரைத்து வைத்த தக்காளி சாறை ஊற்றிக் கிளறிகொள்ளவும். மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும். தக்காளி பச்சை வாசனை போகும் வரை தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும் . பின் பொறித்து வைத்த முட்டையை அதில் விட்டு நன்கு கிளறவும். இப்போது வெட்டி வைத்த கொத்தமல்லி கொஞ்சம் சேர்த்து கிளறி பரிமாறவும். இப்போது சூடான முட்டை மசால் தயார்.