மீந்து போன இட்லி இருந்த வேஸ்ட் பண்ணாதிங்க ?? இட்லி வைத்தும் மஞ்சூரியன் செய்யலாம் !!

Update: 2024-10-17 11:30 GMT

இட்லி மஞ்சூரியன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேவையான பொருட்கள் :

மீந்து போன இட்லி – 6,

சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்,

கடுகு – அரை ஸ்பூன்,

உளுந்து – ஒரு ஸ்பூன்,

சீரகம் – 1/4 ஸ்பூன்,

கருவேப்பிலை – ஒரு கொத்து,

பச்சை மிளகாய் – ஒன்று,

பெரிய வெங்காயம் – ஒன்று,

தக்காளி – ஒன்று,

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்,

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்,

தனியா தூள் – அரை ஸ்பூன்,

டொமேட்டோ சாஸ் அல்லது சோயா சாஸ் – கால் ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

ஒரு வாணலியை தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மீந்து போன இட்லியை கட்டமாக நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு வாணலியை வைத்து . இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிந்து வந்ததும் உளுந்து, சீரகம் சேர்த்து பொன்னிறமாக தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடுங்கள். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பச்சை மிளகாய்க்கு பதிலாக நீங்கள் குடைமிளகாய் சேர்த்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டு நறுக்கிய தக்காளி பழங்களையும் சேர்த்து மசிய வதக்குங்கள். பின்னர் இவற்றுடன் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின்படி சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி விடுங்கள். பின்னர் உங்களிடம் சோயா சாஸ் அல்லது டொமேட்டோ சாஸ் எது இருந்தாலும் அதில் ஒரு கால் டீஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் நன்கு மசிய வதங்கிய பின்பு நீங்கள் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு ரெண்டு நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். மசாலா அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து இட்லியில் இறங்கிய பின்பு நறுக்கிய மல்லி தழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்தால் சுடச்சுட இட்லி மஞ்சூரியன் ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...

Tags:    

Similar News