முருங்கைக்காய் கட்லெட் ரெசிபி !

Update: 2024-10-18 12:16 GMT

முருங்கைக்காய் கட்லெட்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முருங்கைக்காயுடன் மசாலா பொருட்கள் சேர்த்து வித்தியாசமான சுவையில் கட்லெட் ஒன்றினை தயார் செய்யலாமா .....


தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 8

கடலை மாவு - 1/4 கப்

கரம் மசாலா - 1 ஸ்பூன்

மிளகாய் துகல்கள் - 2 ஸ்பூன்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - சிறிது

( உப்பு, எண்ணெய்) - தேவையான அளவு

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட முருங்கைக்காயை அளவாக நறுக்கி குக்கர் ஒன்றில் மூழ்கும் அளவு தண்ணீருடன் சேர்த்து 4 விசில் வர வேக வைத்து இறக்கவும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சுத்தம் செய்து பின் நன்கு பொடியாக நறுக்கி தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

பின் இதனுடன் கடலை மாவு, கரம் மசாலா, மிளாகய் துகல்கள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு ஒரு முறை கலந்துவிடவும்.

பின் இதனுடன் அவித்து எடுத்த முருங்கைக்காயில் இருந்து திப்பைகளை மட்டும் பிரித்து எடுத்து சேர்க்கவும். பின், கையில் பிடிக்கும் பதத்திற்கு (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து) பிசைந்துக்கொள்ளவும்!

இதனிடையே கட்லெட் பொரித்து எடுக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

அதேநேரம் தயாரா பிசைந்து வைத்த கட்லெட் மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, தட்டையாக தட்டி தயார் செய்துக்கொள்ளவும்.

பின் கொதிக்கும் எண்ணெயில் இந்த கட்லெட் துண்டுகளை சேர்த்து பதமாக பொரித்து எடுக்க சுவையான முருங்கைக்காய் கட்லெட் ரெடி!

Tags:    

Similar News