கலக்கலான தக்காளி சாதம் ...!

வெரைட்டியாகவும், சுவையாகவும் செய்வது முக்கியம். அந்த வகையில் ஸ்பெஷல் தக்காளி சாதம் எப்படி செய்வது?

Update: 2024-01-19 09:29 GMT

கலக்கலான தக்காளி சாதம் ...!

இப்படி வெரைட்டியா செய்தா யாருக்குப் புடிக்காது? ஸ்பெஷல் தக்காளி சாதம் வெரைட்டியாகவும், சுவையாகவும் செய்வது முக்கியம். அந்த வகையில் ஸ்பெஷல் தக்காளி சாதம் எப்படி செய்வது? என இந்த பதிவில் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்

எண்ணெய்-4 டீஸ்பூன்

பச்சை அரிசி -1 கப்

கிராம்பு- 3,

பெருஞ்சீரகம் -1/2 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை- 1

நறுக்கிய வெங்காயம் -1

பச்சை மிளகாய்- 2

பூண்டு- 3 பல்

தக்காளி-5

மிளகாய் தூள்- 1.5 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் -1 டீஸ்பூன்

கரம் மசாலா -1/2 தேக்கரண்டி

பெருங்காயம்-ஒரு சிட்டிகை அளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழை போன்றவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயையும் நீள வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும்.

1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , பெருங்காயம் , இலவங்கப்பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் சேர்க்கவும்.

2.பின் நறுக்கிய வெங்காயம் , கீறிய பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்க்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் பொன்னிறமாக வதக்கவும்.

3.பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

மிளகாய் தூள் , காஷ்மீரி மிளகாய் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.

4.உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசாலா அடிபிடிக்காமல் இருக்க ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கலாம். எண்ணெய் திரண்டு ஒன்றாக வர வேண்டும்.

5.கழுவிய பச்சை அரிசி அல்லது பாஸ்மதி அரிசியை இதனுடன் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அனைத்தையும் நன்கு கலக்கவும். அதன் மேல் கொத்தமல்லி தழை தூவி நன்கு கலக்கவும்.

பின் குக்கரை மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

Tags:    

Similar News