நெல்லிக்கனி சிப்ஸ், வற்றல் !

Update: 2024-05-09 11:40 GMT

நெல்லிக்கனி சிப்ஸ்

தேவையான பொருட்கள

நாட்டு நெல்லிக்கனி - 100

தயாரிப்புமுறை:

பொதுவாக நெல்லி மழைக்காலங்களில் கிடைப்பதால் வெட்டி 7 சமைத்து ஊறுகாய் போடுகிறோம் அதில் சத்துக்கள் அழிகின்றன. அதற்குப் பதில் சிபஸ் (அ) வற்றல் செய்யலாம் இமமுறையில் வருடம் முழுவதும் பயன்படுத்தலாம் சளித்தெல்லையும் இராது

நன்றாக முற்றிய முழு நெல்லிக் கனிகளைக் கழுவிச் சிறு சிறு துண்டுகளாகச் சீவலாம் அல்லது நறுக்கலாம கொடைைய நீக்கி விடவும் பின் வெள்ளைத் துணியில் விரித்து நன்றாக வெயிலில் காய வைக்கவும் நன்றாக உலர்ந்தவுடன் காற்றுப் புகாமல் பத்திரப்படுத்தவும் இதுவே நெல்லிசிபஸ் உப்பு, மிளகாய ஏதும் சேர்க்கக் கூடாது வேசு வைக்கக் கூடாது வெயிலில் காயவைப்பதால் நெல்லியின் விட்டமின் 'சி' குறையாத தன்மையில் உள்ளது.

பயன்கள்:

தேவையான போது ஒன்று இரண்டு வாயில் போட்டு சுவைத்துப் பின் தண்ணீர் குடிக்கலாம் மிகச்சுவையாக இருக்கும் இனிக்கும் சிறிது சிப்ஸை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து துவையல் செய்யலாம். இரவில் ஊறவைத்துக் காலையில் நெல்லி பானமாகவும் குடிக்கலாம்.

நீரழிவு அன்பர்களின் அற்புதமான மருந்தும் உணவும் நெல்லிச்சிப்ஸ் எனலாம். பசியின்மையை ஒரே நாளில் நீக்கும். காபி, டீ அன்பர்கள் பான்பராக், புகையிலை, சிகரெட் அன்பர்கள் நெல்லியின் மூலம் நிவாரணம் பெறலாம். பயண காலங்களில் பயன்படுத்தலாம் கண்ணாடி அணிந்த அன்பர்கள் நெல்லியால் நல்ல பலன் பெறலாம் இளமை மேம்படும் மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம் அதிக கொலஸ்ட்ரால் தொப்பை அன்பர்கள் நெல்லிச் சிப்ஸின் மூலம் நல்ல நலம் பெறலாம். உடலின் அமிலத்தன்மை. புளியேப்பம், வாயுப் பொருமல் நீங்கி சிறுநீர் பிணிகள் விலகும். முடக்குவாதம் மூலநோய் குறையும் பெண்களின் ஒரு ஒப்பற்ற மருந்து- மாத விடாய்ப் பிணிகள் நீங்கும் சாவரோக நிவாரண உணவு

"முதியோரும் நெல்லியும் முதலில் புளிப்பாக இருந்தாலும் பின்னாளில் வாழ்வை வளமையாக்குவதில் இனிப்பாக இருக் கிறார்கள்

நெல்லியை வெயிலில் உலர்த்தினாலும் அதில் உள்ள விட்டமின் குறைவதில்லை அதில் லெனின் என்ற திரவம் உள்ள தால் விட்டமின் சிதையாமல் மேலும் கூடுகிறது. உடனடி சுத்தக் குடிநீர் தயாரிப்பில் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு டீஸ்பூன் நெல்லி பொடி கலந்தால் நல்ல குடிநீர் உடனடியாகக் கிட்டும். தாது விருத்திக்கும், தலைமுடி டானிக்குக்கும் பயன்படுகிறது. இரவில் பயன்படுத்தக் கூடாது நரம்புத்தளர்வு, காக்காய் வலிப்பு, உடன் மனநலக் குறைவு அன்பர்கள் தினமும் நெல்லிச்சிப்ஸ் அல்லது நெல்லித் துவையல் சாப்பிட வேண்டும்.

Tags:    

Similar News