டேஸ்ட் மட்டுமில்ல ஹெல்தியான முளை தானிய கோலா லட்டு !
முளை தானிய கோலா லட்டு
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு - 100 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
மூக்குக்கடலை - 100 கிராம்
சோயாபீன்ஸ் - 100 கிராம்
கோதுமை - 100 கிராம்
கம்பு - 750 கிராம்
வெல்லம் - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
ஏலம்தூள் - சிறிது
தேங்காய் துருவல் - 3 மூடிகள்
தயாரிப்பு முறை:-
பச்சைப்பயறு, வேர்க்கடலை, மூக்குக்கடலை, சோயாபீன்ஸ், கோதுமை, கம்பு இவைகளை எட்டு மணி நேரம் நீரில் ஊற வைத்து 8 மணி நேரம் ஈரத்துணியில் கட்ட வேண்டும். ஒரு சில பயறுகள் தவிர எல்லாம் முளை வரும் வேர்க்கடலை சில மணி நேரம் கூடுதலாகும் அடிக்கடி தண்ணீர் தெளிக்கலாம்
முளைத்த தானியங்களை வெயிலில் நன்றாகக் காயவைத்து அரைக்க வேண்டும் மாவைச் சலிக்காமல் வைக்கவும். வெல்லத்தை தேவையான நீரில் கலக்கலாம் பாகும் எடுக்கலாம் அல்லது தேன் பயன்படுத்தலாம் தேவையான அரைத்த மாவைக் கலந்து அத்துடன் முந்திரி, கழுவிய உலர் திராட்சை ஏலம் தூள் தேங்க திருத்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம் இதுவே முளைதானிய லட்டுறு (அல்லது) கோலா லட்டு தேங்காய் திருகல் கலக்காமலும் லட்டு செய்யலாம்.
பயன்கள்:
தொலைதூரப் பயணகாலத்தில் பயன்படுத்தலாம் எண்ணெய் பலகாரத்திற்குப் பதில் விருந்தோம்பலில் பயன்படுத்தலாம். சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவரும் சாப்பிடலாம். சத்து பலம் மிகுந்தது. செலவு மிகவும் குறைவு. நோஞ்சான் அன்பர்கள் அழகும் புஷ்டியும் பெறுவர். ஓடியாடி விளையாடும் அன்பர்களுக்கு ஏற்ற உன்னத சத்துலட்டு. காலை மாலை டிபனுக்குப் பதில் சாப்பிடலாம். புரதச்சத்து பல மடங்கு உள்ள உணவு தொடர்ந்து பயன்படுத்த உடல் வனப்பும், பொழிவும் பெறும் அகோரப்பசி அன்பர்கள் முளைதானிய லட்டுமூலம் பலன் பெறுவர். எல்லாப் பிணியாளர்களும் அவசியம் சாப்பிட வேண்டும்.