முருங்கைக்காய் கிரேவி ...செய்வது எப்படி ?

Update: 2024-02-01 11:52 GMT

முருங்கைக்காய் கிரேவி

முருங்கைக்காய் சீசன் டைம்- ல சாம்பார் ,குழம்பு வச்சு போர் அடிக்குதா? வித்தியாசமாய் செஞ்சு அசத்தனும்னு நினைக்கிறிங்களா?

உங்களுக்குத்தான் இந்த பதிவு ....சட்டுன்னு,பட்டுன்னு ஒரு சமையல் பாக்கலாம் வாங்க .

தேவையான பொருட்கள் :

எண்ணெய் -50 ml

முருங்கைக்காய் -3

பெ. வெங்காயம் –2

தக்காளி –3

ப. மிளகாய் –2

இஞ்சி, –5 துண்டுகள்

மஞ்சள் தூள் – 1/2டீ ஸ்பூன்

மிளகாய் தூள் – 1டீ

கொத்தமல்லி- கைப்புடி அளவு

கருவேப்பிலை-1கொத்து

உப்பு தேவையான அளவு

செய்முறை :

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பொறிந்ததும் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துபின் கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளிசேர்த்து நன்கு வதக்கவும்.பின் சிறு துண்டுகளாக வெட்டி வைத்த முருங்கைக்காயை இதில் சேர்க்கவும்.

நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை வதக்கவும்.

பின் முருங்கைக்காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும் முருங்கைக்காய் நன்கு வெந்தவுடன் நசுக்கி வைத்திருந்த பூண்டு சேர்க்கவும் .

தண்ணீர் நன்கு வற்றி தொக்கு பதத்திற்கு வந்ததும் கொத்துமல்லி தலையை தூவி இறக்கவும்.இப்போது முருங்கைக்காய் கிரேவி ரெடி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்

Tags:    

Similar News