முள்ளங்கி ஊறுகாய் எப்படி செய்யலாம்

Update: 2024-08-30 11:30 GMT

முள்ளங்கி ஊறுகாய்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முள்ளங்கி ஊறுகாய்

(ஐந்து நபர்களுக்கு)

தேவையான பொருட்கள்-

வெள்ளை முள்ளங்கி 300 கிராம்

அல்லது சிவப்பு முள்ளங்கி - 300 கிராம்

இஞ்சி 100 கிராம்

எலுமிச்சை 5

இந்துப்பு அல்லது பிளாக்சால்ட் சிறிது

தயாரிப்பு முறை:

முள்ளங்கியைக் கழுவி காரட் திருகல் போல் சீவலாம் அல்லது தீக்குச்சி வடிவில் நறுக்கலாம். இஞ்சியைத் தோல் சீவி வெட்டிச் சாறு எடுக்கவும். எலுமிச்சையைக் கொட்டை நீக்கி சாறு எடுக்கவும். இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாறு கலந்து அதில் நறுக்கிய முள்ளங்கியை பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். தேவைப்படின் இந்துப்பு அல்லது பிளாக்சால்ட் கலக்கவும். தேவையெனில் மிளகுத்தூள் சேர்க்கலாம்.

பயன்கள் :

மலச்சிக்கல் தீரும், நீரழிவு அன்பர்களும் அருமையாகச் சாப்பிடலாம் அடுப்பில் சமைக்காத எண்ணெய் இல்லாத ஊறுகாய்.

உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் அன்பர்களுக்கு அவசியமான ஊறுகாய், அஜீரணம், பசியின்மை அன்பர்கள் அவசியம் சாப்பிட வேண்டும் சிறுநீரகப் பிணிகள் மறையும். அதிக உடல் எடை அன்பர்கள், தொப்பை, வாயு பொருமலால் அவதிப்படும் அன்பர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும்.

இதில் இஞ்சிச் சாறுக்குப் பதில் தயிரில் ஊறவைத்தும் செய்யலாம். இதேபோல் நெல்லி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய் போன்றவைகளையும் அடுப்பில் சமைக்காமல் எண்ணெய் சேர்க்காமல் தயாரிக்கலாம்.

எல்லா இயற்கை அவல் சாத வகைகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

முள்ளங்கி அதிக குளிர்ச்சி தரும் உணவு. சீதள உடல் அன்பர்கள் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சிறுநீர்க்கடுப்பு. சிறுநீர் எரிச்சல் உள்ள அன்பர்கள் நல்ல பயன் பெறலாம். குடல் நோய், பல் வலி, கரப்பான் நீங்கும். மூல வியாதி, மூலக்கடுப்பு மூல எரிச்சலை விரைந்து நீக்கும். ஜீரணம் மேம்படும். காய்கறிகளில் மலிவானது. எனினும் மருத்துவக் குணங்கள் மிகுந்துள்ளது.

Tags:    

Similar News