கம்பு புட்டு செய்வது எப்படி !
Update: 2024-08-17 11:30 GMT
கம்பு புட்டு எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்
தேவையான பொருட்கள்:
கம்பு - 4 கப்
சர்க்கரை - ½கப்
தேங்காய் - 1/2 மூடி
உப்பு - சிறிது
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
கம்பை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் தோல் வந்துவிடும்.
நன்றாக புடைத்துவிட்டு, வாசம் வரும்வரை வறுக்கவும்.
வறுத்த கம்பை புட்டுக்கு போல் மாவாக்கி கொள்ளவும். உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து,கம்புமாவில் தெளித்து பிசறவும்.
கையில் கொழுக்கட்டையாக பிடித்தால், நிற்கும் அளவுக்கு தண்ணீர் தெளித்தால் போதும். தேங்காயை துருவி வைக்கவும்.
கம்புமாவை ஆவியில் வைத்து வேக விட்டு எடுக்கவும். சூடாக இருக்கும் போதே, சர்க்கரை, தேங்காய் துருவல், நெய் சேர்த்து கலந்து வைக்கவும்.