பழைய சாதத்தில் பஞ்சு போல இட்லி!

Update: 2024-03-25 09:22 GMT

பழைய சாதத்தில் இட்லி

இட்லியில் உப்புமா செஞ்சு பார்த்திருப்போம். சாதத்துல இட்லி செஞ்சு பார்த்து இருக்கோமா? அட ஆமாங்க! பழைய சாதம் இருந்தா இனி தூக்கி போடாதீங்க,பஞ்சு மாதிரி இனி இப்படி இட்லி செஞ்சு அசத்துங்க. உங்க குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க .பழைய சாதம் உடலுக்கு மிக நன்மை தரக்கூடியதும் கூட . பழைய சாதத்தில் பஞ்சு போல இட்லி எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்:

பழைய சாதம் - 1 கப்

ரவை - 1/4 கப்

தயிர் - 3-4 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் மிக்சர் ஜாரில் பழைய சாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ரவையை சேர்த்து அதனுடன் தயிரை ஊற்றி, நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும் . பின்னர் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும். பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீரை நன்கு கொதிக்க விட வேண்டும். அதே சமயம் இட்லி தட்டில், அரைத்து வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து எடுத்தால், சுவையான பஞ்சு போன்ற இட்லி தயார். இதை ஆற வைத்து சாப்பிட சுவை அள்ளும்.

குறிப்பு: இந்த மாவைக் கொண்டு தோசையும் சுடலாம்.

Tags:    

Similar News