கம்பு சட்னி !!

Update: 2024-11-16 12:21 GMT

கம்பு சட்னி 

தேவையான பொருட்கள்:

கம்பு - 1/4 கப்

உளுந்து - 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப

வெங்காயம் - 1

உப்பு - தேவையான அளவு

கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை:

*முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பொன்னிறம் ஆனதும் வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்.

*வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

*தாளித்தவற்றை சட்னியில் சேர்த்து பரிமாறவும். 

Tags:    

Similar News