இந்த கிளைமேட் -க்கு ஆரோக்கியமான கற்பூரவள்ளி பஜ்ஜி !!
கற்பூரவள்ளி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாகும். வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும். இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.தனியாக சாப்பிட முடியாதவர்கள் இப்படி சாப்பிடலாம்
தேவையான பொருட்கள் ;
கடலை மாவு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - தேவையான அளவு
பெருங்காய பவுடர் - தேவையான அளவு
பொரித்தெடுக்க எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கற்பூரவள்ளி (ஓமவள்ளி) இலை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை ;
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்தூள், பெருங்காய பவுடர் அனைத்தையும் இட்லி மாவு பதத்தில் தண்ணீர் விட்டு கரைத்துக் கற்பூரவள்ளி இலையை பறித்து தண்ணீரில் அலசி பஜ்ஜி மாவில் முக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும் பொரித்து எடுக்கவும் சூடான கற்பூரவள்ளி பஜ்ஜி தயார்.