கிட்சன் டூப்பர் டிப்ஸ் !
Update: 2024-05-03 17:26 GMT
துவரம் பருப்பை வேக வைக்கும் போது தேங்காய்த்துண்டு ஒன்றை நறுக்கிப் போடவும். பருப்பு விரைவில் வெந்து வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.
துவரம்பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துப் பின் வேக வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும்.
சாம்பார் செய்யத் துவரம் பருப்பு வேகவைக் கும் போது பருப்போடு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்தால் சாம்பார் நல்ல வாசனையாக இருப்பதோடு கெட்டுப் போகாமலும் இருக்கும்.
காலிபிளவர், முட்டைகோஸ் இவைகளை வேகவைக்கும் போது ஒரு துண்டு இஞ் 3 சியைச் சேர்த்து வேகவிட்டால் துர்நாற்றம் இல்லாமல் சுவையாக இருக்கும்.
சேம்பு, பிடிகருணை ஆகியவைகளை இட்லித்தட்டில் வேகவைத்தால் குழையாது.
அரிசி கழுவிய தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சீக்கிரமாகக் கிழங்குகள் வேகும்.