வாங்க வாங்க கிட்ச்சன் டிப்ஸ் பாக்கலாம் !

Update: 2024-05-17 14:11 GMT

கிட்சன் டிப்ஸ்

  • பக்கோடா செய்யும் போது வேர்க் கடலையைப் பொடி செய்து கலந்தால், மொரு, மொருப்பும், ருசியும் கிடைக்கும்.
  • அதிரசம் செய்து விட்டீர்கள்? ஆனால் கடிப்பதற்கு மெதுவாக இல்லாமல் கரடு முரடாக இருக்கிறதா? இட்லிக் குக்கரில் வைத்து ஆவியில் அவிய விட்டு எடுங்கள். அப்புறம் பாருங்கள். ஆஹா?
  • புதிதாக வாங்கிய அரிசி வடிக்கும் போது குழைந்தால் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு விட்டு இறக்கினால் பொல பொலவென்று இருக்கும்.
  • கத்தரிக்காய்க் கூட்டோ, பொரியலோ எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்கினால் மணம் கம கமவென்று இருக்கும்.
  • கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும் சுவை வாசனை சத்து மூன்றும் அதிகப்படியாகும்.
Tags:    

Similar News