இல்லத்தரசிகளுக்கு கிச்சன் டிப்ஸ் !!

Update: 2024-07-31 11:08 GMT

கிச்சன் டிப்ஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சாம்பாருக்குப் பருப்பு வேகவைக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கொள்ளு சேர்த்து வேகவைத்து சாம்பார் வைக்க, உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.

கோதுமையில் பரோட்டா செய்யும்போது ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம் கலந்து செய்யலாம்.

சுவையாகவும் எளிதில் ஜீரணமும் ஆகும். வெண்டைக்காய், கத்திரிக்காய் காரக்குழம்பு செய்யும்போது ஒரு டேபிள்ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்தால், குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லையென்றால் சிறிதளவு முருங்கையிலைகளைத் தூவி இறக்க, அது தனிச்சுவையைத் தரும்.

சுண்டைக்காய் குழம்பு செய்யும்போது நல்லெண்ணெய் விட்டு தாளிப்பு செய்தால், சுவையும் மணமும் மனத்தை அள்ளும்.

தேங்காய்க்குப் பதில் வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்துவிட்டால் குழம்பு கெட்டியாகவும் சுவையுடனும் இருக்கும்.

பருப்பு சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு சிறிதளவு புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால், சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.

Tags:    

Similar News