கொரியா ஸ்டைல் வெள்ளரி கிம்ச்சி !!
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் - 8
சில்லி ஃப்ளேக்ஸ் - 30 கிராம்
வெங்காயம் - 1
வெங்காயத்தாள் - தேவையான அளவு
நறுக்கிய பூண்டு - 30 கிராம்
மீன் சாஸ் - 15 கிராம்
சர்க்கரை - 20 கிராம்
வறுத்த எள் விதை - 30 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் வெள்ளரிக்காயை சுத்தம் செய்துவிட்டு, அதனை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். அதன் மீது உப்பு தூவிவிட்டு, தண்ணீர் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.வெள்ளரிக்காய் நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு வெள்ளரியை கழுவி காயவைக்க வேண்டும்.
இப்போது மற்றொரு பவுலில் நறுக்கிய வெங்காயத்தாள் மற்றும் “நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும் அடுத்து, சில்லி ஃப்ளேக்ஸ், நறுக்கிய பூண்டு, மீன் சாஸ், சர்க்கரை மற்றும் வறுத்த எள் விதை சேர்க்க வேண்டும்.
அனைத்து பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். அந்த பேஸ்டை நறுக்கிய வெள்ளரியுடன் சேர்க்க வேண்டும். வெள்ளரி முழுவதும் பேஸ்ட் சேரும் வரையில் பிரட்டி எடுக்கவும்இந்த கலவையை காற்றுபுகாத டப்பாவில் அடைத்து 4 முதல் 5 நாட்கள் வரையும் வைத்து சாப்பிடலாம்.