லெமன் ராகி சேமியாவா? டேஸ்ட் பண்ணி பாருங்க!
லெமன் ராகி சேமியா
தேவையான பொருட்கள்:
200 கிராம் - ராகி சேமியா
எலுமிச்சைச்சாறு - 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - ½ டீஸ்பூன்
எண்ணெய் - 1½ டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரை கொதிக்க வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து ராகி சேமியா மூழ்கும் வரை ஊற்றி தனியே 5 நிமிடம் மூடிவைத்து பின்னர் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேர்க்கடலை சேர்த்து சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.
அதே எண்ணெய்யில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சைச்சாறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
வேகவைத்து வடிகட்டிய ராகி சேமியா, வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றை இந்தக் கலவையில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: ராகி சேமியாவை குளிர்ந்த நீரில் அலசிய பின் சுத்தமான துணியில் பரவலாக வைத்தால் அதிக நீரை துணி உறிஞ்சி விடும். சேமியா ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கும்.