ரொம்ப சுவையான ஸ்வீட் புரூட் அவல் பாயாசம் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.....
அரிசி உணவுக்கு பதில் நல்ல மாற்று உணவு கெடுதல் விளைவிக்காத கார்போஹைட்ரேட் புரதம் மிகுந்த உணவு நல்ல தெம்பு தரும் உணவு, இயற்கை உணவில் மலிவான உணவு ,பள்ளி சிறுவர்கள் விரும்பும் உணவு, பசி அடங்கும் உணவு, அமிலத்தன்மை நெஞ்செரிச்சல் சரி செய்யும் உணவு, மலக்கட்டு விலகும் நீரழிவு அன்பர்கள் வெஜிடபிள் அவல் மிக்ஸ் சாப்பிடலாம் கனிகள் சாப்பிடாத அன்பர்கள் ஸ்வீட் புரூட் அவலை விரும்பி சாப்பிடுவர் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவு காலை மாலை டிபனுக்கு பதில் கூட சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
அவல் - அரை கிலோ
திராட்சை - 50 கிராம்
கொய்யா - 50 கிராம்
ஆப்பிள் - 50 கிராம்
பேரிச்சை - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
இனிப்பு தேன் அல்லது வெல்லம் - 200 கிராம்
ஏலம் தூள் - சிறிது
தேங்காய் துருவல் - 4 மூடிகள்
செய்முறை :
அவலை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் ஒரு முறை கழுவி நீரை வடித்து ஊற விடவும். பழங்களை கழுவி தோல் சீவாமல் சிறிய துண்டாக அல்லது தீக்குச்சி வடிவில் வெட்டலாம், திராட்சையை நீரில் ஊற விடவும் வெள்ளத்தை ,தூளாக்கவும் பேரிச்சையை கழுவி கொட்டை நீக்கி வெட்டவும், ஊறிய அவலுடன் வெட்டிய பழங்கள் பேருச்சை இனிப்பு ஏலம் தூள் தேங்காய் துருவல் திராட்சை கலந்து கிளறவும் மிகவும் சுவையான ஃப்ரூட் அவல் பரிமாற ரெடி. மத்திய உணவின் முதல் அங்கமாகவும் காலை மாலை டிபன் நேரங்களிலும் சாப்பிட நல்ல உணவு.