மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா ரெசிபி !!

Update: 2024-05-21 11:00 GMT

ஜிகர்தண்டா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஜிகர்தண்டா மதுரையில் ஃபேமஸ் ஆன ஒரு பானமாக திகழ்கிறது. இதில் சேர்க்கப்படும் அனைத்தும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது. வீட்டிலேயே ஜிகர்தண்டா செய்து பாருங்கள். குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் :

பாதாம் பிசின் – 4

சர்க்கரை – தேவையான அளவு

பால் – 1 கப்

வெண்ணிலா ஐஸ்கிரீம் – 2 கப்

நன்னாரி சர்பத் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு கிண்ணத்தில் பாதாம் பிசின் சேர்த்து முதல் நாள் இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலை பிசின் பொங்கி கிண்ணம் முழுவதும் நிரம்பி இருக்கும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து உருக வைக்கவும். அது பொன்னிறமாக வர தொடங்கியதும் அதில் ½ கப் வெந்நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். நீரில் சர்க்கரை முழுவதுமாக கரைய வேண்டும். இப்போது, ஜிகர்தண்டா செய்வதற்கான சுகர் சிரப் தயார். பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் தண்ணீர் கலக்காத ½ கப் கெட்டியான பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இப்போது, அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கோவா பதத்திற்கு நன்கு காய்ச்சவும். பால் கெட்டியான பேஸ்ட் போல் வந்ததும் அதை தனியாக எடுத்து கொள்ளவும். அதே போல் மற்றொரு கடாயில் மீண்டும் ½ கப் கெட்டியான பாலை சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதித்து வரும் போது அதில் தயார் செய்து வைத்திருக்கும் பாதியளவு சுகர் சிரப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். ரெடிமேட் வெண்ணிலா ஐஸ்கிரீமில் மீதியிருக்கும் சுகர் சிரப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தயார் செய்த அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும். ஒரு டம்ளரில் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின் சேர்த்து அதனுடன் நன்னாரி சர்பத் சேர்க்கவும். பின்பு அதன் மேல் தயார் செய்த பால் பேஸ்ட் மற்றும் கெட்டியாக காய்ச்சிய பாலை சேர்க்கவும். இறுதியாக அதன் மேல் ஐஸ்கிரீம் வைக்கவும். சூப்பரான மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.

Tags:    

Similar News