குஷ்பூ தோசை செய்வது எப்படி?
என்னங்க தோசை மாவு தீந்து போச்சா ? இனி மாவு அரைக்காமலே பூரி போல புப்னு தோசை செய்யலாம் .குஷ்பு இட்லி சாப்பிட்டு இருக்கோம் அது என்ன குஷ்பு தோசா? இருக்குங்க .வாங்க எப்டி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
கடலை மாவு-1/2கப்
அரிசி மாவு -1/4 கப்
கார்ன்ஃப்ளார்- சிறிதளவு
தயிர் -1 கப்
ரவா -1கப்
சோடா உப்பு-1 சிட்டிகை
உப்பு-தேவையான அளவு
கேரட்-2
வெங்காயம்-1
ப.மிளகாய்-4
கொத்தமல்லி, கருவேப்பிலை-தேவையான அளவு
செய்முறை :
முதலில் ரவையை நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். தண்ணீர் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். இப்போது ரவையுடன் அரிசி மாவு, கான்ஃப்ளார் கடலை மாவு தேவையான சோடாப்பு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் பொடி பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கி கொள்ளவும்.கலக்கிய மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.இப்போது தோசை சுட தோசை மாவு தயார். பின் அடுப்பில் தோசைக்கல்லை கல் சூடானதும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை ஊற்றி மாவை கொஞ்சமாக அடை போல பரப்பி விட்டு,அதன் மேல் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி மூடி வைத்து இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால் பூரி போல புப்ப்னு குஷ்பு தோசா ரெடி. இதோட தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையாக இருக்கும்.