மணக்க மணக்க மட்டன் சுக்கா !!
தேவையான பொருட்கள் :
கால் கிலோ மட்டன்
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்
கரம் மசாலாத்தூள்
இஞ்சி - பூண்டு விழுது
சின்ன வெங்காயம்
பூண்டு
கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை
காய்ந்த மிளகாய்
எண்ணெய்
உப்பு
செய்முறை :
கால் கிலோ மட்டனைச் சிறிய பீஸ்களாக நறுக்கி நன்கு அலசி குக்கரில் போட்டு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, சிறிதளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு, நன்கு வேகவைத்து எடுத்து வைக்கவும்.
150 கிராம் சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். 10 பல் பூண்டை வட்டமாக சிறிய ஸ்லைஸ்களாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி சிறிதளவு கறிவேப்பிலை, 4 கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து... வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து, வேகவைத்த மட்டனையும், மட்டன் வெந்த தண்ணீரையும் சேர்க்கவும். இதில் 2 சிட்டிகை கரம் மசாலாத்தூள் போட்டு, மட்டனில் உள்ள தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவினால்...மட்டன் சுக்கா ரெடி!