வெறும் 10 நிமிடம் போதும் சுடசுட பன்னீர் ரோல் தயார் !!
தேவையான பொருட்கள் ;
பன்னீர் உதிர்த்தது - 3/4கப்
ரொட்டி துண்டுகள் - 3
மைதா - 3டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1டீஸ்பூன்
கெட்டித்தயிர் - 2டேபிள் ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு
செய்முறை ;
பாலை நன்கு காய்ச்சி கொதித்தவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெனிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வைத்தால் பன்னீர் தயார்.தயாரான பன்னீரை ஒரு துணி அல்லது வடிகட்டியை வைத்து வடித்து எடுக்கவும்.அப்போது உதிரியாக பன்னீர் கிடைக்கும். தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.ஒரு பௌலில் ரொட்டித்துண்டுகள்,மைதா மாவு, தயிர் சேர்த்து நன்கு பிசையவும். பின்னர் எல்லா மசாலாப் பொருள்களையும் அதே பௌலில் சேர்த்து கலந்து விடவும்.கை வைத்து நன்கு மாவுப்பதத்தில் பிசைந்து ரோல் செய்ய தயாராக வைக்கவும்.பின்னர் விருப்பப்பட்ட வடிவில் ரோல் செய்து வைத்துக்கொள்ளவும்.அதன் பின் வாணலியை ஸ்ட வ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள பன்னீர் ரோல்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.சுடசுட பன்னீர் ரோல் தயார்.